கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி இருவர் கவலைக்கிடம் 13 நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து 19 ஆம் தேதி மணலூர்பேட்டையில் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி என்று சொல்லக்கூடிய ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆற்று திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மாற்றுத்திறனாவில் பங்கேற்று அண்ணாமலையார் உண்ணாமுலை உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டு அப்பகுதியில் விற்கும் பல்வேறு பொருட்களை தனது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி செல்வது வழக்கமாக இருந்து வருகின்றனர். இன்று வழக்கம் போல லட்சக்கணக்கான பொதுமக்கள் ஆற்றுப்பகுதியில் இருந்து வந்த நிலையில் மணலூர்பேட்டை முக்கிய பிரதான 4 முனை சந்திப்பில் ஆஞ்சநேயர் கோயில் அருகில் திருவண்ணாமலை மாவட்டத்தை ஏழுமலை (41) என்பவர் ஹீலியன் சிலிண்டர் பயன்படுத்தி அதில் காற்று நிரப்பி பலூன் விற்பனை செய்து வந்துள்ளார், அப்போது பலூன் வாங்குவதற்காக குழந்தைகளும் பெரியோர்களும் அவரது அருகில் இருந்துள்ளனர், அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில் திருவண்ணாமலை கலா (50) என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்தில் பலியானார், 13 நபர்கள் கடுகாயமடைந்து திருவண்ணாமலை சென்னை உள்ளிட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் விழுப்புரம் சரக டி ஐ ஜி அருளரசு மாவட்ட எஸ்பி அரவிந்த் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வெடிகுண்டு சோதனை நிபுணர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். 1.மாதேஷ்(11) 2.ரம்யா(17) 3.முகிலம்(23) 4.ஏழுமலை(41) 5.தமிழ்செல்வி(57) 6.சினேகா(17) 7.இந்திராணி(50) 8.யஷ்வந்த்(19) 9.ரோகித்குமார்(9) 10.ரிஷி(22) 11.லோகேஷ்(17) 12.அனுஷ்கா(17) 13.கலா(50) 14.யுவஸி(11) இறந்த நபர் கலா(50). கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் பலூன் கேஸ் நிரப்பும் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் குறித்த விபரங்கள் வெளியானது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இதையும் படியுங்கள் : ஆளுநருக்கு இபிஎஸ் ஆதரவு