செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் மீண்டும் ஹெலிகாப்டர் சவாரி தொடங்கியது. கடந்த 2023-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சவாரி தொடங்கப்பட்டு திடீரென அது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஹெலிகாப்டர் சவாரி நேற்று தொடங்கியது. இன்று, நாளை மற்றும் 17, 18,19 என மொத்தம் ஆறு நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த ஹெலிகாப்டர் சவாரியில், வானில் பறந்தபடியே இயற்கை காட்சிளை கண்டு ரசிக்க 5 நிமிடத்திற்கு நபர் ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்தவர்கள் ஹெலிகாப்டரிலில் பறந்தபடியே கடற்கரை, பக்கிங்காம் கால்வாய், பழைய மாமல்லபுரம் சாலையின் உள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் கண்டு ரசித்தனர்.