Also Watch
Read this
சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றும் ஆம்னி பேருந்துகள்
போக்குவரத்து நெரிசல்
Updated: Sep 09, 2024 06:13 AM
சென்னை அடுத்த மதுரவாயல் பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நின்றும், மெதுவாக ஊர்ந்தும் சென்றன.
வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved