சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு ஆளாயினர். ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க கோயம்பேடு சந்தைக்கு படையெடுத்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி ரோகினி திரையரங்கிற்கு திரண்ட ரசிகர் கூட்டம் மற்றும் மழையால் ஆங்காங்கே சாலையில் தேங்கிய மழைநீர் உள்ளிட்டவை காரணமாக, நெற்குன்றம் முதல் கோயம்பேடு மேம்பாலம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால், பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். கோயம்பேடு போலீசார், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.