ஈரோட்டில் உள்ள பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வாகனங்களும், வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்தனர்.ஈரோட்டில் இருந்து மேட்டூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் நகரின் பிரதான சாலையாக உள்ளது.இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, போக்குவரத்து காவலர்கள் இல்லாத நேரத்தில் சமூக ஆர்வலர்கள் சிலர் தாமாக முன் வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருவதாக கூறப்படுகிறது.