சேலம் மாவட்டம், ஏற்காட்டில், கடும் குளிருடன் கூடிய பனிப்பொழிவால், பகல் நேரத்தில் கூட வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகலூர், மஞ்சக்குட்டை, படகு இல்லம், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடும் பனி மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையும் இல்லாததால், சாலையோர வியாபாரிகளும் வருமானத்தை இழந்து தவிக்கும் நிலை உள்ளது.கடும் குளிருடன், பனிப்பொழிவால், ஏற்காடு மலை முழுவதும் மேகக் கூட்டங்கள் மிதந்து சென்று, பனி மூடி காட்சி தருகிறது. அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா பகுதிகளில், பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.