சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று இரவு 10 மணியளவில் திடீரென சூறாவளி காற்று வீசத் தொடங்கி, இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் சாய்ந்தும், பேனர்கள் கிழிந்தும் தொங்கின.