ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. வாலாஜா, வி.சி.மோட்டூர், அனந்தலை, தகரகுப்பம், செங்காடு, ஆட்டோ நகர், மாந்தாங்கல், முத்துக்கடை, நவல்பூர், சீனிவாசன்பேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது.