ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, குருநாதசுவாமி கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குதிரை ஷெட் சரிந்து விழுந்தது. புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலின் ஆடித் தேர்த்திருவிழாவும், தென்னிந்தியாவிலேயே புகழ்பெற்ற குதிரைச் சந்தையும் வரும் புதன்கிழமை தொடங்க உள்ளது. இதையொட்டி, குதிரைகளுக்காக தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் குதிரை ஷெட் சரிந்து விழுந்தது.