நெல்லையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேரன்மகாதேவி, கங்கணாங்குளம், வீரவநல்லூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்ய துவங்கியது. சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய துவங்கியது.