கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக, சிறுமுகை சாலையில் 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.