கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை சுற்று வட்டாரப் பகுதிகளில் பலந்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சில இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.