மதுரை மாநகரம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மாலை வேளையில் பெய்த கனமழையால் அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல்,ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, ரயில்வே நிலையம், காமராஜர் சாலை, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்ததால், அதனை வெளியேற்ற முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். வீடுகளுக்குள் இருந்த பெரும்பாலான பொருட்கள் மழைநீரில் நனைந்து சேதமானதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.