சேலத்தில் வெளுத்து வாங்கிய திடீர் கனமழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேதாஜி தெரு, பாரதியார் தெரு, கஸ்தூரிபாய் தெரு, கிச்சிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. எருமாபாளையம் பிரதான சாலையில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.பைக்கில் சென்ற சிலர் நிலைதடுமாறி தண்ணீரில் கீழே விழுந்த நிலையில், அப்பகுதி சிறுவர்கள் சிலர் மழைநீரில் ஆனந்தமாக விளையாடினர்.