திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனால் துர்நாற்றம் வீசிய நிலையில், முறையாக தூர்வாராமல் இருந்ததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.