ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நெமிலி சுற்றுவட்டார பகுதிகளான பனப்பாக்கம், ஓச்சேரி, சேந்தமங்கலம், பள்ளுர், திருமால்பூர், பிள்ளைப்பாக்கம், வேட்டாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனிடையே ஆயுதப்பூஜை என்பதால் சாலையோரம் பூசணிக்காய் மற்றும் பழ கடைகள் போட்ட வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.