சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அதிகாலை பெய்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீரக்கல்புதூர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இரண்டடி உயரத்திற்கு தண்ணீர் சேறும் சகதியுமாக தேங்கி நின்றதால் சிரமத்திற்கு உள்ளான மக்கள் சிறிய வாளிகளை கொண்டு வீடுகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து சேதமானதாகவும் கழிவு நீர் கால்வாய் தூர்வாராததே இதற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டினர்.