திருவாரூர் மாவட்டத்தில் மூன்று நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நான்காயிரம் ஏக்கர் சம்பா நெல்பயிர் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கூடூர்,கீழகூத்தங்குடி, மொசக்குளம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஏக்கர் ஒன்றிற்கு 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், தற்போது மழைநீரில் மூழ்கி சம்பா பயிர்கள் அழுகி வருவதால் செய்வது அறியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.