திருவாரூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து வயலிலேயே முளைக்கத் தொடங்கியதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கீழசிராங்குடி, குடவாசல், நீடாமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக நெல் பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து முளைத்தன. ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாக வேதனை தெரிவித்த விவசாயிகள் பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.