தென்காசி மாவட்டம் கடையம் அருகே கனமழை பெய்தது. தோரணமலை முருகன் கோயில் அருகே பெய்த மழையால், மலையில் நீர் அருவி போல கொட்டியது. கோயிலுக்கு சென்று படிக்கட்டிகளில் பெருக்கெடுத்த நீரால் மக்களும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.