செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கருங்குழி, படாளம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், தொழுப்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.