நெல்லை மாநகர் பகுதியில் திடீரென கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்ததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில்,பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடங்களுக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.