ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திகினாரை, இக்கலூர், கோடிபுரம்,காமையன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.இதனால் குளிர்ச்சியான சூழல் உருவான போதும், மழை தொடர்ந்ததால் காலையில் பணிக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.