விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். நகர பகுதிகளில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி மழைநீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.