தேனிமாவட்டம், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வீரபாண்டி, அல்லிநகரம், லட்சுமிபுரம், பெரியகுளம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி,வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.