நாகை மாவட்டத்தில் பெய்து வரும் திடீர் கனமழையால் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்மூட்டைகள்,மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக நெல் மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக வேதனை தெரிவித்தனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்வதற்கு லாரிகள் வராத காரணத்தினால் நெல் மூட்டைகள் அதிகளிவில் தேக்கம் அடைந்து, மழையில் நனைவதாக கூறிய விவசாயிகள் தார்பாய்களை வழங்கி நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.