தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சின்ன சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்ன சுருளி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மழை மற்றும் நீர்வரத்து குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மழை நின்று நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.