குமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பாம்பூரி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 600 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால், அணைகளும், நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் குளச்சல், மண்டைக்காடு, திங்கள்நகர் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.