கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் சுமார் ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குந்தாரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, மாதேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், வறண்டு காணப்பட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.