நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 31ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 28ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 31ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையே தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும், ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 11ஆவது நாளாக நீடிக்கிறது.