காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, விநாடிக்கு 7 ஆயிரத்து 815 கன அடியில் இருந்து 13 ஆயிரத்து 332 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒனேக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினியருவி மற்றும் மெயின் அருவி உள்ளிட்டவைகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.