தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் கனமழை பெய்தது. இதனால் நள்ளிரவு முதல் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பக்கரை அருவியில் நீரவரத்து குறையும் வரை குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளதால், விடுமுறையை முன்னிட்டு அருவிக்கு வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.