கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அத்திப்பாக்கம், சடக்கட்டி, ஜம்பை, அரும்பாக்கம், அரியூர், ஆலூர், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.