மதுரை மாவட்டம் மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், இரவு நேரத்தில் திடீரென இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.