மதுரையில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக கோரிப்பாளையத்தில் இருந்து செல்லூர் செல்லும் ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். நகரில் கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.