மதுரை மாநகரில் வெளுத்து வாங்கிய கனமழையால், முல்லை நகர் பகுதி ஆலங்குளம் கண்மாய் நிரம்பி தெருக்களில் வெள்ளம் பாய்ந்து ஓடியது. மேலும், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த இடங்களில் ஆய்வு செய்த ஆட்சியரிடம், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.