ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக அந்தியூர்-பர்கூர்-கர்நாடக மலைப்பாதையில் தாமரைக்கரை, நெய்க்கரைபட்டி உள்ளிட்ட இடங்களில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இரவு முதல் காலை வரை தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் காலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.