கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் திருவாரூரில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாரான குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். எருக்காட்டூர், நீலனூர், வடக்குசேத்தி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நிலத்திலேயே முளைக்கத் தொடங்கியதாகவும், ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதையும் படியுங்கள் :குன்னூர் பேருந்து நிலையத்தில் இளைஞர் அடாவடி மதுபோதையில் இருந்த இளைஞர் 4 மணி நேரமாக அட்ராசிட்டி