தென்காசி மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சிவகிரி, வாசுதேவநல்லூர், ராயகிரி, ராமநாதபுரம், விஸ்வநாதபேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.