தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாரான சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 600 ஏக்கரில் பயிரிடப்பட்ட இரண்டாம் போக நெற்பயிர்கள் ஒரு வாரத்தில் அறுவடை செய்ய இருந்த நிலையில் மழையில் நனைந்து சேதமடைந்தன. ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவித்த விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.