நெல்லை மாவட்டம், அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில், மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில், கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல் நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக, ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் 179 மில்லி மீட்டர் மழையும், நாலுமுக்கில் 166 மில்லி மீட்டர் மழையும், காக்காச்சியில் 132 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 98 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாத நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.