தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சுற்று வட்டாரப்பகுதிகளில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்து களத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் மழை காரணமாக பயிர்கள் நனையும் நிலை ஏற்பட்டது.