கனமழை எச்சரிக்கை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தேங்கி கிடக்கும் 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் உள்ள எடமணல், மாணிக்கபங்கு, எம்.ஆர்.எம். மில், சித்தர்காடு குடோன், எருக்கூர் மில் ஆகிய இடங்களுக்கு அரவைக்கு ரயில் மூலம் நெல் மூட்டைகளை ஏற்றி அனுப்பி வைக்க உத்தரவிட்ட ஆட்சியர், தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்திலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையிலும் பாதுகாப்பாக வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.