கோவை மாநகரில் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.குறிப்பாக கோவையில் உள்ள பூ மார்கெட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து நின்றதால் வியாபாரிகள் செய்தவறியாது தவித்தனர்.