தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. சங்கரன்கோவிலில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் திடீரென இடி மின்னலுடன் அரை மணி நேரத்திற்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில், மக்கள் அதில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் சுமார் 20 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.