வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் தேங்கியது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில், பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள கால்வாயினை தூர்வாரி மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.