கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டுப்பட்டி, தாளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தாழ்வாக உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.