திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இரும்பேடு, பையூர், லட்சுமிநகர், வடுகசாத்து, சைதாப்பேட்டை, முள்ளிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.