ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் வாலாஜாபேட்டை பச்சையம்மன் கோவிலில் மழைநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பெல்லியப்பா நகர் பகுதியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமைவாய்ந்த பச்சையம்மன் கோயில் முகப்பு பகுதியில் இருந்து மூளூர் அம்மன் கருவறை வரை சுமார் 100மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மழைநீருடன் கலந்த கழிவுநீரில் கோயில் பணியார்கள், பூசாரிகள் உள்ளிட்டோர் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.