மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை முதல் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.